அரசாங்கம்

மகன்:- அப்பா அரசியல்னா என்ன?
அப்பா:- உதாரணத்துக்கு நம்ம
குடும்பத்தை எடுத்துக்கோ.
என்கிட்டே நிறையா காசு இருக்கு, அதனால
நான் தான் மேல்
தட்டு வர்க்கம்..
அம்மா என்கிட்டே அப்போ அப்போ பணம்
வாங்கி செலவு செய்யறாங்க இல்ல.. அவங்க
தான் அரசாங்கம்.. நம்ம
வீட்டுல வேலை செய்யறாலே வேலைக்காரி அவ
தான்
உழைக்கும் வர்க்கம்.. நீ தான் மக்கள், உன்
தம்பி பாப்பா தான் எதிர்காலம்.
இப்போ புரியுதா?
மகன்:- சுத்தமா புரியலை..
அப்பா:- நல்லா யோசிச்சி பாரு புரியும்
அன்று இரவு தூங்கிட்டு இருந்த மகன்
தம்பி பாப்பா அழுகிற
சத்தம் கேட்டு கண் விழிச்சான்.
தம்பி பாப்பா ஜட்டியில ஆய் போய்
நாச்த்தியா இருந்துச்சி.
போய் தூங்கிட்டு இருந்த
அம்மாவை எழுப்பினான்.
அம்மா எழவே இல்லை.. அம்மா பக்கத்துல
அப்பாவை காணோம்.
சரி வேலைக்காரிய கூப்பிடலாம்னு அவ
ரூமுக்கு போனா அங்க அவன்
அப்பா வேலைக்காரி-ய
சுரண்டிகிட்டு இருந்தார்.
ரூமுக்கு வெளிய நின்னு கத்தி பார்த்தான்,
ஆனா கடைசி வரைக்கும்
யாருமே வந்து அவனுக்கு உதவி செய்யலை..
மறுநாள் காலை..
அப்பா:-
என்னடா அரசியல்னா என்னான்னு புரிஞ்சுதா..
மகன்:- ரொம்ப தெளிவா புரிஞ்சதுப்பா..
அப்பா:- அப்படியா வெறி குட்..
இப்போ தெளிவா சொல்லு பாக்கலாம்..
மகன்:- மேல் தட்டு வர்க்கம் உழைக்கும்
வர்க்கத்தை தான் சுரண்டி எடுக்கும்..
அதை அரசாங்கம் கண்டுக்காம
தூங்கிட்டு இருக்கும்..
மக்களுக்கு உதவி செய்ய யாரும்
வரமாட்டாங்க.. எதிர்காலம் நாறி போய்டும்..